இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Dinamaalai April 27, 2025 04:48 PM

தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

அதிக வெப்பநிலை நீடிக்கும் நேரத்திலும், மழை பெய்யும் போதும், கர்ப்பிணிகள், சிறியவர்கள், முதியோர்களைத் தனியே வெளியே அனுப்பதீங்க.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.