“விராட் கோலியின் இடத்தை இந்த தமிழக வீரரால் மட்டும்தான் நிரப்ப முடியும்”… அனில் கும்ப்ளே அதிரடி..!!
SeithiSolai Tamil May 15, 2025 04:48 PM

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி விளையாடிய 4-வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உள்நாட்டு போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர். எனவே அவர் விராட் கோலியின் இடத்தை பிடிக்கலாம்.

இங்கிலாந்தில் முக்கியமான 4வது இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு சில தகுதிகள் தேவை. கருண் நாயர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அதனால் அவருக்கு அங்குள்ள நிலைமைகள் குறித்து தெரியும். எனவே அவர்தான் தகுதியான வீரர். மேலும் இந்தியாவில் சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற இளைஞர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரிய வரவில்லை. முதல் தரமாட்டத்தில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு நிச்சயமாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும். கருண் நாயர் போன்ற உள்நாட்டுப் போட்டிகள் சிறப்பாக விளையாடியவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் அவரைப் போன்ற உள்நாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.