ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அந்த பாடலால் படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோவிந்தா கோவிந்தானு பாடல் வைத்து இந்து மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் போலீஸ் கமிஷனர் அலுலவகத்தில் புகார் அளித்தார் பாஜக நிர்வாகி அஜித். இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தடை விதிக்கக் கோரி ஜனசேனா நிர்வாகிகள் புகார் அளித்தார்கள்.
மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்கள் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆட்கள்.
திருப்பதி ஏழுமலையான் தொடர்பான பாடலை தவறாக சித்தரித்து உருவாக்கவில்லை என்றும் தானும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லும் பக்தன் தான் என சந்தானம் பேசியிருந்தார். ஆனால், பாடலை நீக்கவில்லை என்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என மான நஷ்ட வழக்கை போட்ட நிலையில், தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழு பாடலை நீக்கியுள்ளது.
"கோவிந்தா கோவிந்தா" என்கிற வரிகள் இடம்பெற்ற கிஸ்ஸா பாடல் ஏழுமலையான் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி மீண்டும் மறு தணிக்கையை படக்குழு பெற்றுள்ளது. நாளை வெளியாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் அந்த பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ளது.