“என்னை பொன் முட்டையிடும் வாத்தாக யூஸ் பண்ணாங்க…” கெனிஷா அழகான துணை…. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை….!!
SeithiSolai Tamil May 16, 2025 01:48 AM

பிரபல நடிகரான ரவி மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது , எனது தனிப்பட்ட வாழ்க்கை உண்மையின்றி திரிக்கப்படுவது அதிர்ச்சிகரமாக உள்ளது. எனது மௌனம் பலவீனம் அல்ல. அது உயிர் வாழ்வதற்கான முயற்சி. எனது பயணத்தையோ காயங்களையோ அறியாதவர்கள் எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கும்போது நான் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

எனது கடந்த கால திருமண உறவுகளை யாராவது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது புகழுக்கு முயற்சித்தால் அதை அனுமதிக்க மாட்டேன். இது என் வாழ்க்கை என் உண்மை மற்றும் குணமடைந்து வரும் பாதை. சட்ட நடவடிக்கைகளில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதில் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

இத்தனை வருடமாக என் முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். என் குழந்தைகளை விட்டு நான் பிரியவில்லை. அவர்கள்தான் என் சந்தோஷம். அவர்கள் தான் பெருமை எல்லாம். என் முன்னாள் மனைவியை விட்டு தான் நான் விலக முடிவு செய்தேன். தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுபவித்து வந்தனர். என்னை கணவராக அல்லாமல் பொன்முட்டையிடும் வாத்தாக ஆர்த்தியின் குடும்பம் பயன்படுத்தியது. இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது என கூறியுள்ளார்.

இதனை அடுத்து கெனிஷா பற்றி கூறும்போது என்னுடைய வீட்டை விட்டு ஏதும் இல்லாமல் நான் வெளியேறிய போது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா. அவர் ஒரு அழகான துணை வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்சனைகளிலும் என்னுடன் இருந்தவர்.

என்னுடைய கதையை கேட்டு அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசராக இல்லாமல் தோழியாக இருந்து உதவினார். என் வாழ்க்கையில் ஒளி கொண்டு வந்தவர். தோழியாக அறிமுகமான கெனிஷா தற்போது துணையாக மாறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.