ஒரு படத்தோட விமர்சனம் இந்த மாதிரி தான் இருக்க வேண்டும்… மனம் திறந்த சந்தானம்…
Tamil Minutes May 16, 2025 05:48 AM

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா வில் தோன்றியதன் மூலம் தனது கேரியரை தொடங்கினார் சந்தானம். அதற்கு பின்னால் நடிகர் சிம்பு மன்மதன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார்.அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சந்தானம்.

தொடர்ந்து 2000 த்தின் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகர்களுக்கு நண்பராக நகைச்சுவை நடிகராக சச்சின், பொல்லாதவன், அறை எண் 305 இல் கடவுள் சிவா மனசுல சக்தி பாஸ் என்ற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் சந்தானம். இவர் டைமிங்கில் பேசும் பஞ்சு டயலாக்குகள் மிகப் பிரபலமாக ஆனது.

2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக நடிக்க வேண்டும் என்ற விருப்பப்பட்ட சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் மூன்று பேர்களில் ஒருவராக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்ததை விட நாயகனாக அவருக்கு கிடைத்த வரவேற்பு குறைவு தான். ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார் சந்தானம். ஆனால் இவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் மிகப் பிரபலமானது. இந்த படத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியான நிலையில் டிடி ரிட்டன்ஸ் என்று அடுத்து வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்தானம் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் சந்தானம் ஒரு படத்திற்கான விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு படம் வெளிவந்தவுடன் விமர்சனம் கூறுகிறார்கள். அது நல்ல விஷயம் தான். ஆனால் கண்ணா பின்னா என்று விமர்சனம் கூறக்கூடாது. அவர்கள் ஒரு படத்தை பற்றி கூறும் விமர்சனமானது அந்த படத்தில் வேலை செய்பவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர படம் ஓடாமல் தடுத்து அவர்களை நிலைகுலைய வைக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார் சந்தானம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.