இதுதான் திரைத்துறை வாழ்க்கையில் நடிகை தீபிகா படுகோன் வாங்கும் அதிக சம்பளம்…. எந்தப் படத்திற்கு… எவ்வளவு தெரியுமா?..!!!
SeithiSolai Tamil May 16, 2025 05:48 AM

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முதலில் கன்னடத்தில் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஓம் ஷாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இவரது நடிப்பில் கடைசியாக கல்கி என்ற திரைப்படம் வெளிவந்தது.

இவர் அடுத்ததாக ஸ்பிரிட் என்ற திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்க இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோன் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளரும் சரி என்று கூறியுள்ளார். இதன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையில் இப்படத்திற்காக தான் தீபிகா அதிக சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.