ரோகித், கோலி போல இவரும் ஓய்வு பெறுவார்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி..!!
SeithiSolai Tamil May 15, 2025 04:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர் அதிலிருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் எடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்தை பார்மை மீட்டெடுத்தார்.

பின்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை என்றும், அவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாக்கியது. இதனால் ரோகித், கோலி வரிசையில் முகமது ஷமியும் ஓய்வு பெறுவார் என்ற செய்திகளும் வெளியானது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகமது ஷமி, அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ரொம்ப நல்லது மகாராஜ், உங்கள் வேலையில் மீதமுள்ள நாட்களை நீங்கள் எண்ண வேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும். இது இன்றைய நாளில் சிறந்த கதை மன்னிக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.