ஒடிசா தலைநகரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் காவல்துறையினர் உடன் வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புவனேஸ்வரில் உள்ள கல்யாண மண்டபத்தில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் ரிசப்ஷனில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கினார்.
View this post on Instagram
மேலும் தானும் அவரும் கடந்த 2021 இல் இருந்து காதலித்து, 2024 இல் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறினார். மேலும் தன்னிடம் இருந்து அவர் 5 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினார். இது அங்குள்ள விருந்தினர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் மணமகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.