இந்த கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?
Newstm Tamil April 28, 2025 12:48 PM

கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல அவதிகளுக்கு உள்ளாக நேரலாம்.

உதாரணமாக, கோடையில் முட்டை சாப்பிடுவது நல்லது, கெட்டதா என்ற சஞ்சலம் சிலருக்கு இருக்கலாம். அதுபற்றிய விடை தேடினால்... முட்டையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்திருக்கின்றன. அவ்வளவு சத்துகள் நிறைந்த முட்டையை கோடைகாலத்தில் சாப்பிட்டால், செரிமான பிரச்சினை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் அது சரியில்லை என்கின்றனர், உணவியல் வல்லுநர்கள்.

உண்மையில், கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம் என்கின்றனர் அவர்கள். முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலின் நீர்ச்சத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகின்றன.

மேலும் முட்டை உடலின் ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் உடல் சோர்வு, பலவீனத்தைத் தடுக்கிறது. ஆனால் முட்டையின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதும் நல்லதல்ல.

காரணம், கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பொதுவாகவே, கோடை கடக்கும் வரை அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது என்பது அவர்களின் அறிவுரை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.