நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் ரசிகர்கள் இருந்தா மாஸ்னு நினைப்பாங்க. அப்புறம் அவர்கள் நல்லா வளர்ந்துட்டா அவங்களே வேணாம்னு சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மாட்டாங்க. தலைவா அது உங்க பெருந்தன்மை. நாங்க உயிருள்ளவரை உங்க ரசிகர்கள் தான்னு சொல்வாங்க. அந்த வேளையில் வீட்டை மறந்து கட் அவுட்டுக்குத் தான் பாலாபிஷேகம் செய்வேன்னு அடம்பிடிக்குற ரசிகர்களால் அந்த ஹீரோக்களுக்கு அவப்பெயர் உண்டானால் ரசிகர் மன்றத்தையே வேணாம்னு கலைச்சிடுவாங்க. சிலர் அதை நற்பணி மன்றமாக்கி தங்களது புகழை மேலும் வலு சேர்ப்பார்கள்.
அந்த வகையில் சக நடிகர்களாக ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான போட்டியுடன் வளர்ந்தவர்கள் அஜித், விஜய் என இருபெரும் ஜாம்பவான்கள். இவர்களில் அஜித் நடிப்பு தவிர ரேஸ் என்று பிசியாக இருக்கிறார். விஜய் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு அரசியலில் முழுநேரமாக இறங்கியுள்ளார். இப்போது நடிக்கும் ஜனநாயகன்தான் அவருக்கு கடைசி படம். இந்த நிலையில் இந்த இருவரும் தன் ரசிகர்களுக்கு என்ன சொல்றாங்கன்னு பாருங்க.
அஜித் ரசிகர்களைப் பற்றி சொல்வது இதுதான். ரசிகர்களா இருங்க. ஆனா ரசிகனா மட்டும் இருக்காதீங்க. படிக்கிறவங்க நல்லா படிக்கணும். வேலைக்கு போறவங்க இன்னும் கடுமையா உழைக்கணும். உங்க வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க என்கிறார் அஜித்.நடிகர்
அஜித் தன் ரசிகர் மன்றத்தைக் கலைத்தவர். அதே நேரம் எனக்கு தல, அல்டிமேட், அஜித்தே கடவுளேன்னு எந்தப் பட்டமும் தேவையில்லை என உதறித்தள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் விஜய், இனிமே நீங்க எல்லாருமே சோஷியல் மீடியா ஃபேன்ஸ் கிடையாது. என்னைப் பொருத்தவரைக்கும் நீங்க எல்லாருமே நம்ம கட்சியோட விர்ச்சுவல் வாரியர்ஸ். அதாவது மெய்நிகர் வீரர்கள். அப்படின்னு உங்களைக் கூப்பிட ஆசைப்படுறேன் என்கிறார் விஜய்.அந்;த வகையில் இரு ஹீரோக்களும் அவரவர் நிலைக்கேற்ப ஸ்டேட்மெண்ட் கொடுத்துருக்காங்க. இதுல யாரு சொல்றது சரிங்கறது உங்களுக்கே வெளிச்சம்..!