Kollywood: கோலிவுட்ல பல படங்கள் அந்நிய மொழியில் காப்பியடித்து எடுப்பது வழக்கம். ஆனால் தமிழில் ஹிட்டடித்த ஒரு படம் கதையையே ஆட்டையை போட்டு எடுத்து வெளியிட்டதெல்லாம் வேற லெவல் சம்பவம் தான். அப்படி எடுக்கப்பட்ட சில சூப்பர் ஹிட் திரைப்படங்கள் குறித்த தொகுப்புகள்.
நான் அடிமை இல்லை – டாடா
ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவான திரைப்படம் நான் அடிமை இல்லை. பணக்கார பெண்ணை காதலிக்கும் புகைப்படக் கலைஞரான ரஜினிகாந்த் வீட்டின் எதிர்ப்பால் தனியாக சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி கர்ப்பமாக அவருக்கு பிறந்த குழந்தை கொடுத்தால் அவர் விலக வேண்டும் என ஸ்ரீதேவி தந்தை ஆர்டர் போட அதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டு குழந்தையுடன் வெளியேறுகிறார். மகனை வளர்க்கிறார். பல ஆண்டுகள் கழித்து மகனை காணும் ஸ்ரீதேவி மீண்டும் தன்னுடைய குடும்பத்துடன் இணைகிறார். இதுவும் டாடா படத்தின் அதே கதை தான்.
அண்ணாமலை – ஆறுமுகம்
நண்பன் மீது உயிரை வைத்திருக்கும் இன்னொரு நண்பனை அவன் உதாசீனப்படுத்த அது தாங்க முடியாமல் ஏழையாக இருந்த நண்பன் அசுர வளர்ச்சியால் பணக்காரனாவது போன்ற கதை தான் அண்ணாமலை. இதை அப்படியே காட்சி மாறாமல் உருவாக்கியிருந்த திரைப்படம் ஆறுமுகம். பரத் பிரியாமணி இயக்க சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
தேவர்மகன் – தலைவா
வெளியூரில் படிக்கும் மகன் அப்பாவை காண வர அங்கு அவர் அப்பாவிற்கு மிகப்பெரிய மக்கள் படை பலமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்பா இறந்துவிட அவருடைய இடத்தில் தலைவனாக மகன் இறங்குவதுதான் தேவர் மகன் படத்தின் கதை. இதே கதையில் தான் ஏல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படம் உருவாகி இருந்தது.
கிரி – பேட்ட
இணைபிரியாத நண்பர்கள் திடீரென ஒரு நண்பர் அதிரடியாக கொல்லப்பட அவருடைய குடும்பத்தை இன்னொருவர் யார் என அடையாளம் சொல்லாமல் பாதுகாப்பது தான் கிரி படத்தின் கதை. ஆனால் இதே கதையில்தான் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான பேட்ட தயாராகி இருந்தது. கிரி படத்தின் வெற்றி அதிகம் என்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது பேட்ட.
பூவெல்லாம் கேட்டுப்பார் – ஜோடி
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள். அவர்களின் சம்மதத்தை வாங்க காதலன் வீட்டிற்கு காதலியும், காதலி வீட்டிற்கு காதலனும் இடம் மாறி அவர்களுடைய காதல் சம்மதத்தை வாங்குவதுதான் படத்தின் கதை. முதலில் வெளியான ஜோடி படத்தின் அதே கதையை வைத்துதான் போடலாம் கேட்டு பார்த்த திரைப்படமும் உருவாகியிருந்தது.
தற்போது வெளியாகும் அட்லீ இயக்கத்தில் திரைப்படங்கள் நிறைய காப்பி என ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில் சமீபத்திய நாட்களாக கோலிவுட் இயக்குநர்கள் இதே கதையை தான் தொடர்ச்சியாக பண்ணியிருப்பது பல படங்களின் கதையை அலசும்போது தெரிய வருகிறது.