புது தில்லியில் மணமகனே திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வடநாட்டை பொருத்தவரை, அங்கு பெரும்பாலான திருமணங்கள் மாலை அல்லது இரவு வேலைகளில் தான் நடைபெறும். அப்படிப்பட்ட ஒரு வேளையில் இந்த திருமணம் நடைபெற இருந்திருக்கிறது. அப்போது, டிஜே ஒரு திருமண பாடலை ஒளித்து இருக்கிறார். அதைக் கேட்டவுடன் தன்னை மறந்து சில நிமிடங்கள் ஒன்றாக. பின்னர் உடைந்து அழுதி இருக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு, “எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்” என்று திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் மணமகனின் சொந்தக்காரர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி கேட்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அது ஒரு ரன்பீர் கபூர் படத்தின் பாடல். 2016 ஆம் ஆண்டில் வெளியான, ஏ தில் ஹே முஷ்கில் என்ற படத்தில் இடம்பெற்று இருந்த பாடலாகும். இதில் ரன்பீர் கபூருடன், அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மணமகன் கேட்டு, தனது திருமணத்தை நிறுத்திய பாடலின் பெயர் “சன்னா மரியா”. இந்தப் பாடலை ஹீரோ, உனது காதலியின் திருமணத்தை சென்று பாடுவார். இதைக் கேட்டவுடன் அந்த மணமகனுக்கு தனது எக்ஸ் காதலியின் நினைவுகள் வந்திருக்கிறது. இதனால் அப்செட் ஆகி அழுத அவர், அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.
இந்த விஷயம், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனை கேள்விப்பட்டவர்கள், தங்களின் கருத்துகளை பலவாறாக தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், “நல்ல வேளை, மணப்பெண் தப்பித்து விட்டார்” என்று கூற, இன்னும் சிலர் “மூவ் ஆன் ஆக முடியலன்னா ஏன்டா கல்யாணம் வரைக்கும் வர்ரீங்க?” என்று கூறியிருக்கின்றனர்.