ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 210 ரன்கள் ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
முதலில் அணி சார்பாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூரியவன்ஷி களமிறங்கினர்.இதில் 35 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 07 பவுண்டரிகளுடன் வைபவ் சூரியவன்ஷி சதம் விளாசினார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீர என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு பிறகு (30 பந்துகளில் சதம்) அதிவேக சதம் அடித்த 02-வது வீரர் என்ற சாதனைக்கும் வைபவ் படைத்துள்ளார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய வைபவ் 12-வது ஓவரில் பிரசித் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
இந்த ஆட்டத்தில் வைபவ் 35 பந்துகளில் 101 ரன்கள் விளாசியுள்ளார். இன்றைய ஆட்டத்தின் மூலம் ஒரு அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச ரன்களை (87 ரன்கள்) பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணி சார்பாக, ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 70 ரன்களை எடுத்து அவரும் அதிரடி காட்டினார். இறுதியில், 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 02 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள குஜராத்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.