பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ளதால் நமக்கு இன்ஸ்டன்ட் எனெர்ஜி கிடைக்கிறது .மேலும் பலவிதமான வைட்டமின்களும் இதில் அடங்கியுள்ளது .அது போல தயிரில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது .அதனால் வாழைப்பழத்துடன் தயிரை சேர்த்து சாப்பிட நம் உடல் பெரும் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
2.நார்ச்சத்து மற்றும் நல்ல பாக்டீரியா தயிரில் உள்ளதால் கால்சியம் உறிஞ்சுதல் செய்யப்படுகிறது.
3.காலை உணவில் வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு பிரச்சினை வராமல் தடுக்கும் .
4.வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால், அது கொழுப்பை எரிக்க உதவும் என்று உணவு நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்
5.வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது
6. வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.