விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறக்கடைக்கு ஆசை’ சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவுக்கு மீண்டும் அறிவுரை கூறும் அண்ணாமலை, ’இனிமேல் சிந்தாமணி போன்ற நபரிடம் பழக்கம் வைத்து கொள்ளாதே. மீனா மீது உள்ள கோபத்தில் அவர் உன்னை பயன்படுத்துகிறார்,’ என்று அறிவுரை கூறுகிறார். இருப்பினும், விஜயா கேட்கிற மாதிரி தெரியவில்லை.’இனிமேல் அந்த சிந்தாமணி உடன் பழகினால், நான் வேற மாதிரி இருப்பேன்,’ என்று சொல்கிறார். இதையடுத்து, மீனா ஸ்ருதியிடம், ’உங்களால்தான் எனக்கு பணம் கிடைத்தது,’ என்று கூறி நன்றி சொல்கிறார். அதற்கு ஸ்ருதி ’எங்களால் எல்லாம் எதுவும் இல்லை. முத்து போட்ட பிளான் தான் பணம் கிடைத்ததற்கு காரணம்,’ என்று கூறுகிறார்.
இதையடுத்து சீதாவுக்கு சேர வேண்டிய பணத்தை மீனா அவரிடம் கொடுத்துவிட்டு, நடந்ததை சொல்ல, மாமா ரொம்ப பிரில்லியண்ட், அவர் புத்திசாலித்தனமாக பணத்தை மீட்டு கொண்டு வந்துவிட்டார்,’ என்று சீதாவும் பாராட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மீனா அங்கிருந்து கிளம்பியவுடன் அருண் வருகிறார். அருணிடம் செய்த அந்த பணத்தை கொடுத்துவிட்டு நடந்ததை கூறி, ’எங்க மாமா ரொம்ப புத்திசாலி. போலீசை விட மிக வேகமாக எங்கள் பணத்தை கண்டுபிடித்து விட்டார்,’ என்று சொல்கிறார். அருணும், ’அவரை பார்க்க எனக்கும் ஆசை,’ என்று சொல்கிறார்.
இந்த நிலையில், ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்டில், நீத்து ஒரு விஷயத்தை கூறுகிறார். ’நம்ம ரெஸ்டாரண்டுக்கு இன்று ஒரு பிரபலம் வருகிறார். ஆன்லைனில் விமர்சனம் செய்யும் நபர், அவர் வரும்போது, அவருக்கு நல்ல சாப்பாடு ரெடி செய்ய வேண்டும்,’ என்று கூற, ரவியும் ’சரி செய்து விடலாம்’ என்று கூறுகிறார்.
அப்போது, மீனா அங்கு வந்து, ’நீங்கள் என்னுடைய பணத்தை கண்டுபிடிக்க உதவி செய்தீர்கள். அதற்காக ஒரு சின்ன கிப்ட்,’ என்று கூறி, ’வாழைப்பூ வடையும், பூசணிக்காய் கேசரியும் செய்து வந்திருக்கிறேன்,’ என்று கூறுகிறார்.
இந்த நிலையில், ஆன்லைனில் ரிவ்யூ செய்பவர் வந்துவிட, இன்னும் சாப்பாடு ரெடி ஆகவில்லை என்று ரவி கூற நீத்து அதிர்ச்சி அடைகிறார்.
அப்போது, ஸ்ருதி, ’மீனா கொடுத்த வாழைப்பூ வடையும், பூசணிக்காய் கேசரியையும் இப்போதைக்கு கொடுப்போம். அதற்குள் சாப்பாடு ரெடி ஆகிவிடும்,’ என்று ஐடியா சொல்கிறார். நீத்து முதலில் தயங்குகிறார். ஆனால், ஸ்ருதி, ’நீங்கள் எதுவும் பயப்பட வேண்டாம்,’ என்று உறுதி அளிக்கிறார்.
அவர்கள் அதை ரிவ்யூ செய்ய வந்தவருக்கு அளிக்கின்றனர். அவரும் அதை சாப்பிட்டு, ’ஆஹா, ஓஹோ!’ என புகழ்ந்தார். அதன் பிறகு மற்ற உணவுகளையும் சாப்பிட்டு, கடைசியாக, ’இந்த வாழைப்பூ வடைக்காகவே இந்த ரெஸ்டாரண்டுக்கு வரலாம்,’ என்று கூறுகிறார்.
இதனால் நீத்து மகிழ்ச்சி அடைந்து, ரவி மற்றும் ஸ்ருதிக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக கொடுக்கிறார்.
இந்த நிலையில், ரவி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வந்து, மீனாவிடம் நடந்ததை கூறி, ’உங்களுடைய டிஷ்ஷால்தான் எங்கள் ரெஸ்டாரண்ட் பெருமை கிடைத்தது. அதனால், இந்த பத்தாயிரம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்,’ என்று கூற ’அதெல்லாம் வேண்டாம்,’ என்று மீனா மறுக்கிறார். அதன்பிறகு, ’பாதியாவது வாங்கிக் கொள்ளுங்கள்,’ என்று வலுக்கட்டாயமாக மீனாவுக்கு ஸ்ருதி கொடுக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைய எபிசோட் முன்னோட்டத்தில் ஒரு கேரளா சாமியாரை பார்க்க வேண்டும். ’நான் மனோஜையும் ரோகிணியையும் பிரிக்கப் போகிறேன்,’ என்று பார்வதியிடம் விஜயா கூற,அதை மறைந்திருந்து கேட்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.