உத்திரபிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் விற்பனையாளரிடமிருந்து இரண்டு ஐஸ்கிரீம்களை போலீஸ்காரர்கள் வாங்கிய நிலையில் அவர் அதற்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். இதனால் அருகில் இருந்த ஒரு சிறுவன் வாங்கிய ஐஸ்கிரீம்க்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இது அந்த போலீஸ்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் சிறுவனை குச்சியால் தலையில் கடுமையாக அடித்துவிட்டார்.
இதில் அந்த சிறுவனுக்கு ரத்தம் வழிந்த நிலையில் பின்னர் அந்த போலீஸ்காரர் சிறுவன் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாக வீடியோ பதிவு செய்துள்ளார். இருப்பினும் அந்த சிறுவனை போலீஸ்காரர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் உண்மை தெரிய வந்தது.
தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் பெயர் ராம் நிவாஸ். இவர் எஸ்ஐ. இவரை உடனடியாக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரோகித் தன்னுடைய சகோதரியை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளான்.
அப்போது போலீஸ்காரர்கள் இரண்டு ஐஸ்கிரீமை விற்பனையாளரிடமிருந்து வாங்கிய நிலையில் அதற்கு பணம் கொடுக்குமாறு சிறுவன் கூறியுள்ளான். இதனால் கோபத்தில் போலீஸ்காரர்கள் ரோகித் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது பற்றி ரோகித் தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்களும் முறையாக புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.