ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 09 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. ரகுவன்ஷி 44 ரன்னும், ரிங்கு சிங் 36 ரன்னும், சுனில் நரைன் 27 ரன்னும் எடுத்திருந்தனர்.
டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 03 விக்கெட்டும், அக்சர் படேல் மற்றும் விப்ரஜ் நிகாம் தலா 02 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் அக்சர் படேல் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விபராஜ் நிகம் போராடி 19 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 04-வது வெற்றியையும், டெல்லி அணி 04-வது தோல்வி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 03 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 02 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி தொடர்ந்து 04-வது இடத்திலும், கொல்கத்தா அணி 07-வது இடத்திலும் தொடர்கிறது.