சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றும், அரசு பணத்தை தி.மு.க. அமைச்சர்கள் சூறையாடுகிறார்கள் என கூறும் பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்திரராஜனுக்கு வேறு வேலை கிடையாது அதனால் தான் ஏதாவது சொல்லிக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
அத்துடன், திமுக அரசு ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு முன் சட்டசபை தேர்தல் பணியை தீவிரப்படுத்தி பிரசாரத்தை தொடங்கிவிட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.