கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு எதிர்வரும் மே 1-ந் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தெறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது.
இந்நிலையில், நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது. இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1-ந்தேதி முதல் காலை 6:00 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.