இன்றைய தமிழ்சினிமா உலகில் மிஞ்சிப் போனால் 25 படங்கள்ல ஜோடியா ஒரே நடிகருடன் நடிச்சிருப்பாங்க. அதுக்கு மேல இருக்கறது கஷ்டம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு அத்தனை மொழிகளிலும் சேர்த்துத்தான் கமல், ஸ்ரீதேவி இருவரும் 27 படங்களில் ஜோடியா நடிச்சாங்க.
ஆனா பிரபல மலையாள நடிகை செம்மீன் ஷீலா அப்போதைய சூப்பர் ஸ்டார் பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்களில் ஜோடியாக நடிச்சிருக்காங்க. இதுதான் இன்று வரை முறியடிக்கப்படாத சாதனை. கின்னஸிலும் இடம்பிடித்துள்ளது.
செம்மீன் ஷீலா எம்ஜிஆர், என்டிஆர் என இரு முதல்வர்களுடன் அப்பவே ஜோடியாக நடித்துள்ளார். 1966ல் சத்யன் நடிப்பில் மலையாளத்தில் செம்மீன் என்ற படத்தில் நடித்துள்ளார் ஷீலா. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் பெயருடன் அந்தப் படத்தின் பெயரும் ஒட்டிக் கொண்டதாம். 17வயதிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார்.
செம்மீன் படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இதுவரை 480க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் பாக்யசித்தகம் என்ற மலையாளப் படம். எம்ஜிஆருடன் பாசம் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பம்பாய், சந்திரமுகி படத்திலும் இவர் நடித்துள்ளார். சந்திரமுகியில் பிரபுவின் அத்தை அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தான்.