பாகிஸ்தானில் தொடரும் சோகம்... குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!
Dinamaalai May 01, 2025 01:48 AM

பாகிஸ்தான் நாட்டில் எல்லை பகுதியில் ஏற்கனவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில்  கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில்   அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மிக அருகில் ஏப்ரல் 30ம் தேதி இன்று புதன்கிழமை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான சூழலில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டு காவல் துறையினர் கூறுகையில், அந்தக் குழந்தைகள் அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் அப்பகுதியைக் கடந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.