பஞ்சாப் மாநிலத்தில் பில்லௌர் அருகே ஷிஸ்க் லேன் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று பாலை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டாலாவிலிருந்து அம்பாலா நோக்கி சென்ற லாரி, ஓரமாக சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி, திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது.
பால் வேன் ஓட்டுனர் பல்வந்த் சிங் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து லாரியில் இருந்த சுமார் 23,000 லிட்டருக்கும் மேற்பட்ட பால் சாலையில் ஓடியது. இந்தக் காட்சிகளைப் பார்த்த உள்ளூர் மக்கள் உதவிக்கு வராமல், பாலை அள்ளிசெல்வதில் மும்மூரம் காட்டினர்.
இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் பொதுமக்கள் பைகள், குடங்கள், பாட்டில்கள் கொண்டு மக்கள் பாலை சேகரிப்பதை காண முடிகிறது . இச்செயல் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஓட்டுநர் கத்திக்கொண்டிருந்த போதும், ஒருவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. பில்லௌர் காவல் நிலையத்தின் SHO ஜஸ்விந்தர் சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.