மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் இளைஞர்கள் : ரஜினி வருத்தம்..!
Newstm Tamil May 01, 2025 04:48 AM

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் ரஜினி கூறியுள்ளதாவது: மொபைல் போன் யுகத்தில் நமது இளைஞர்கள், சில பெரியவர்கள் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம் அருமை பெருமை தெரியாமல் உள்ளனர்.

தங்களது கலாச்சாரம் பாரம்பரியத்தில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவை நோக்கி வருகின்றனர். இங்கு தான் நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது என்கின்றனர்.

தியானம், யோகா, இயற்கையான வாழ்க்கையை நோக்கி வருகின்றனர். நமது கலாசாரம், அருமை பெருமைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ரஜினி பேசி உள்ளார்.


 


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.