தவெக தலைவர் விஜய் கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக சார்பில் தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு, மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக விஜய் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவானது, கட்சி கட்டுப்பாடு, கொள்கை உள்ளிட்டவைகளுக்கு எதிராக செயல்படும் உறுப்பினர்களின் மீது நடவடிக்கை எடுக்கும். இக்குழுவிற்கு தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கட்சி தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி ஆகிய இருவரும் தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.