பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நரேந்திர சலுஜா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு 58 வயது ஆகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர சலுஜா பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்துள்ளார். சேஹோரில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நரேந்திர சலுஜா பரிதாபமாக உயிரிழந்தார். பாஜகவில் சேர்வதற்கு முன்பு நரேந்திரன் சலுஜா காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.