நடிகை அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் பிறவியிலிருந்தே சரியாக பேச வராமையும் காது கேட்கும் திறன் குறைபாடும் கொண்டவர். ஆனாலும் தனது அபாரமான நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிநயா. இவரை அறிமுகம் செய்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகும்.
முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிநயா சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது போன்ற விருதுகளை வென்றார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார் அபிநயா.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் அபிநயா. இந்நிலையில் தற்போது தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டார் அபிநயா. அபிநயாவின் கணவரும் அவரை போலவே மாற்று திறனாளி தான்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அபிநயா தனது கணவர் உடனான உறவை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நானும் என் கணவரும் பெரிதாக சத்தியம் செய்து கொண்டதில்லை. அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. எங்களுக்கு இடையேயான காதல் சத்தியத்தை விட பெரியது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று பகிர்ந்து இருக்கிறார் நடிகை அபிநயா.