நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க அனுமதி கொடுக்கிறது.
இது ஒவ்வொரு வங்கிகளையும் பொறுத்து மாறுபடும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 5 முறை ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெறலாம் மற்றும் இதர சேவைகளை பெறலாம். ஆனால் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை இலவசமாக பயன்படுத்த முடியாது. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 21 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இது நாளை முதல் 23 ரூபாய் ஆக உயர்த்தப்படும். இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இன்று முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருவதால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.