IPL 2025: போட்டி கொல்கத்தாவின் பக்கம்!
Dhinasari Tamil May 01, 2025 03:48 PM

#featured_image %name%

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs டெல்லி –டெல்லி – 29.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (204/9, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, அஹிங்க்யா ரஹானே 26, மிட்சல் ஸ்டார்க் 3/43, விப்ராஜ் நிகம் 2/41, அக்சர் படேல் 2/27) டெல்லி கேபிடல்ஸ் அணியை (190/9, டியு பிளேசிஸ் 62, அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகம் 38, சுனில் நரேன் 3/29, வருண் சக்ரவர்த்தி 2/39, அனுகூல் ராய், வைபவ் அரோரா, ரசல் தலா 1 விக்கட்) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் ரஹமானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26 ரன், 5 ஃபோர், 1சிக்சர்), சுனில் நரேன் (16 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அஹிங்க்யா ரஹானே (14 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் நல்ல் ரன்ரேட்டுடன் ரன் சேர்க்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அதன் பின்னர் வந்த ரிங்கு சிங் (25 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆண்ட்ரூ ரசல் (9 பந்துகளில் 17 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அதே ரன் ரேட்டைத் தொடர்ந்தனர்.

20ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் ரோமன் போவெல் (5 ரன்), அனுகூல் ராய் (பூஜ்யம் ரன்), ரசல் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கொத்தா அனி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (4 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டியூ பிளேசிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) 15.2ஆவது ஓவர் வரி ஆடினார். இவரைத் தவிர அக்சர் படேல் (23 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (19 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

மற்றா வீரர்களான கே.எல். ராகுல் (7 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (7 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), சமீரா ( 2 ரன்), குல்தீப் யாதவ் 1 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வருண், சுனில் மற்றும் ரசல் இன்று சிறப்பாக பந்துவீசி மொத்தம் 6 விக்கட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 190 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.