பிரபல நடிகர் “கோத்தி” மஞ்ச என்கிற உமேஷ் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகினர்.!!!
SeithiSolai Tamil May 01, 2025 08:48 PM

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் கோத்தி மஞ்சா என்கிற உமேஷ். இவர் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜோகி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் பிறகுதான் இவரை கோத்தி மஞ்சா என்று அழைத்தனர்.

இவருடைய உண்மையான பெயர் உமேஷ் தான். ஆனால் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான கோத்தி மஞ்சா பெயரை வைத்தே அவரை அழைக்க தொடங்கினர். இந்நிலையில் நடிகர் உமேஷ் தற்போது மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய மரணம் கன்னட சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நேற்று இரவு இவர் மரணம் அடைந்த நிலையில் ஏராளமான கன்னட சினிமாவில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.