#featured_image %name%
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.2 ஓவர்களில் 190, சாம் கரன் 88, டிவால் பிரிவிஸ் 32, யஸ்வேந்திர சாஹல் 4/32, அர்ஷதீப் சிங் 2/25, மார்கோ ஜேன்சன் 2/30, உமர்சராய் 1/39, ஹர்பிரீத் ப்ரார் 1/21) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (19.4 ஓவர்களில் 194/6, ஷ்ரேயாஸ் ஐயர் 72, பிரப்சிம்ரன் சிங் 54, பிரியான்ஸ் ஆர்யா 23, ஷஷாங்க் சிங் 23, கலீல் அகமது 2/28, பதிரனா 2/45, ஜதேஜா 1/32, நூர் அகமது 1/39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (12 பந்துகளில் 11 ரன்) மாற்றும் ஆயுஷ் மஹத்ரே (6 பந்துகளில் 7 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.
ஆனால் மூன்றவதாகக் களமிறங்கிய சாம் கரண் (47 பந்துகளில் 88 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்), ரவீந்திர ஜதேஜா (12 பந்துகளில் 17 ரன்) மற்றும் டிவால்ட் ப்ரிவிஸ் (26 பந்துகளில் 32 ரன்) இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.
அவரது அதிரடி ஆட்டத்தால் அணி 220 ரன் வரை போகும் எனக் கணக்கிட்டிருந்த நிலையில் ஷிவம் துபே (6 ரன்), தோனி (11 ரன்), தீபக் ஹூடா (2 ரன்), அன்ஷுல் காம்போஜ் (பூஜ்யம் ரன்), நூர் அகமது (பூஜ்யம் ரன்), கலீல் அகமது (ஆஅட்டமிழக்காமல் பூஜ்யம் ரன்) ஆகியோர் அதற்கு மேல் ரன் சேர்க்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக யசுவேந்திர சாஹல் வீசிய 19ஆவது ஓவரைக் குறிப்பிட வேண்டும். அதில் அவர் நான்கு விக்கட்டுகள் எடுத்தார்; அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும். இதனால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து சென்னை அணி 190 ரன் எடுத்தது.
இந்த ஐபிஎல்லில் சென்னை அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.
191 ரன் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி இலக்கோடு இரண்டாவதாகக் கள்மிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 23 ரன், 5 ஃபோர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (36 பந்துகளில் 54 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நல்ல தொடக்கம் தந்தனர்.
அதன் பின்னர் பஞ்சாப் அணியின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (41 பந்துகளில் 72 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) அணியை வெற்றிப்பாதையில் இட்டுச் சென்றார். அவருக்குத் துணையாக ஷஷாங்க் சிங் (12 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) விளையாடினார். நெஹல் வதேரா (5 ரன்) இன்று சரியாக விளையாடவில்லை.
அணியின் ஸ்கோர் 188ஆக இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 ரன் எடுக்கவேண்டிய கட்டம். அந்த ஓவரிலும் ஷெட்கே ஆட்டமிழக்க, அவருக்குப் பின்னால் வந்த மார்கோ ஜேன்சன் ஒரு நாலு அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in