கோவையை அடுத்து மதுரை வரும் விஜய் … காலை முதலே விமான நிலையத்தில் குவியத் தொடங்கிய தொண்டர்கள்!
Dinamaalai May 01, 2025 05:48 PM

தவெகவின்  பூத் கமிட்டி மாநாடு கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் அடுத்ததாக மதுரையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக  இன்று விஜய் மதுரை வருகிறார். இதற்காக இன்று மாலை நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்திற்கு வரும் நிலையில்  காலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். 

ஏற்கனவே கோயம்புத்தூரிலும் நடிகர் விஜய்யின் வருகையை முன்னிட்டு தொண்டர்கள் காலை முதலே குவிந்தனர்.அவரை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் இன்று மாலை மதுரை வரும்போது அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.  

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று மதுரைக்கு வரும் விஜய் அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டி குப்பம் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.  விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில்  இன்று காலை முதலே தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.