உழைப்பாளர் உரிமை காப்போம்... தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
Dinamaalai May 01, 2025 05:48 PM

  உலகம் முழுவதும் இன்று மே 1 தொழிலாளர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி. உறுதியை ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்! 


உழைப்பாளர் உரிமை காப்போம்! இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.