நாடு முழுவதும் பொதுவாக 1-ம் தேதி மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று மே 1-ம் தேதி என்பதால் சில புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் நிலையில் கடந்த முறை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது. இதனால் இந்த முறை சிலிண்டர் விலை உயருமா அல்லது குறையுமா என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன் பிறகு ஏடிஎம் மெஷின்களில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன்பு 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 5 முறைக்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதன் பிறகு ரயில் டிக்கெட் விதிகளிலும் புதிய மாற்றம் வரவுள்ளது. அதாவது இனி காத்திருப்பு டிக்கெட்டுகள் பொதுப்பெட்டிகளில் மட்டுமே செல்லுபடி ஆகும். அதன்பிறகு காத்திருப்பு டிக்கெட்டிகளை வைத்து ஸ்லீப்பர், ஏசி மற்றும் கோச் பெட்டிகளில் பயணிக்க முடியாது. இதோடு ரயில் டிக்கெட்டின் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களிலும் மாற்றம் வருகிறது. ஏனெனில் இந்த முறை தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி இரண்டு முறை டெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.