16 ஆண்டுகளில் முதல் முறை… “சொந்த மண்ணில் 4 முறை”… அடுத்தடுத்து அடி… CSK-வின் பிளே ஆப் கனவு தகர்ந்தது… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
SeithiSolai Tamil May 01, 2025 12:48 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. அதன்படி முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் சென்னை அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இதுவரை நடைபெற்ற 18 சீசன்களில் சென்னை அணி 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது. சென்னை அணி 16 சீசன்களில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டும் தான் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. அதே சமயத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக சிஎஸ்கே 4 முறை தோல்வி அடைந்ததும் இதுவே முதல்முறை. மேலும் சென்னை அணி பிளே ஆப் செல்லாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.