வெயில் காலத்தில் பலாப்பழம் சாப்பிடலாமா ? சாப்பிட கூடாதா ?
Newstm Tamil May 03, 2025 01:48 PM

பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது. இது குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் இவற்றில் நீர்ச்சத்து உள்ளதால் உணவை எளிதாக நகர்த்த உதவுகிறது. பலாப்பழத்தில் இயற்கையான செரிமான நொதிகள் உள்ளன. அவை புரதத்தை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பாதையை அமைதிப்படுத்துகின்றன.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடலாம். ஒரு சிறிய கப் பலாப்பழத்தில் நாள் ஒன்றுக்கு தேவையான பொட்டாசியத்தில் 14% கிடைக்கும். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து இதய நோய்கள் அபாயத்தை குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடலாம். ஆனால் மிதமாக எடுத்துகொள்ள வேண்டும்.

இது ஒரு இயற்கை சக்தி ஊக்கி. இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இதில் உள்ள ப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உடனடி மற்றும் நிலையான சக்தியைத் தருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உண்டாகும் பாதிப்பு இதில் இல்லை. மேலும், இது சிக்கலான கார்ப்ஸ் நிறைந்தது. இது உங்கள் உடலுக்கு நீண்ட நேரம் சக்தியை அளிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி 6 ஆனது செல்லுலார் மட்டத்தில் வளர்சிதை ஆற்றலை ஆதரிக்கின்றன.

வெப்ப நோய்கள் மற்றும் பருவ கால நோய்களிலிருந்து பாதுகாக்கும்.இது வைட்டமின் C கொண்டது. உடலில் வெள்ளை அணுக்களை வலிமையாக்கும். இதில் உள்ள வைட்டமின் A, ஃப்ளவனாய்டு மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். வீக்கத்தை குறைக்கும். வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். இதில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கோடை காலத்தில் பலாப்பழம் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் 70-80% நீர் உள்ளது. வியர்வை மற்றும் வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீர் சமநிலையை பராமரித்து நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கின்றன. கோடைக்காலத்தில் பலாப்பழம் உடலை குளிர்ச்சியாக வைத்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

பலாப்பழம் சருமத்திற்கு சூப்பர் உணவு. வைட்டமின் C கொண்ட இவை ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்தவை. இது சருமத்தை இளமையாக வைக்க உதவுகின்றன. சருமத்தை உறுதியாக்கும் கொலாஜன் உற்பத்தியையும் ஊக்குவிக்கின்றன. அதிக நீர்ச்சத்து இருப்பதால், சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது. வைட்டமின் A மற்றும் ஃபிளாவனாய்டுகள் முகப்பருவை குறைத்து, சருமத்தை பளபளப்பாக வைக்கின்றன.

பலாப்பழத்தின் இதர நன்மைகள்

தைராய்டு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கண்களுக்கு நல்லது.
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கலாம்.
இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

பலாப்பழம் பக்கவிளைவுகள் ஏற்படுத்துமா?

பலாப்பழம் உடலுக்கு உஷ்ணத்தை உண்டு செய்து முகப்பரு உண்டு செய்யும் என்று பலர் நினைக்கிறார்க. ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூற்றுப்படி இதில் அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.
கொப்புளங்கள், வேர்க்குரு, கண் கட்டி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, பாக்டீரியாக்கள் வளர சாதகமான சூழலை உருவாக்கும். குறிப்பாக ஸ்டெஃபிலோகோகஸ் பாக்டீரியா கொப்பளங்கள் மற்றும் தோல் நோய்களுக்கு முக்கிய காரணம்.உடல்நலம் சரியில்லாதவர்கள் இதை கவனமாக கையாள வேண்டும்.

பலாப்பழத்தை சரியான முறையில் சாப்பிடுவது எப்படி?

  • பலாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்.
  • வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
  • சாப்பிட்ட பிறகு, 1-2 மணி நேரம் கழித்து பலாப்பழம் சாப்பிடலாம்.
  • நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 80 கிராம் (சுமார் 3-4 பலாப்பழ துண்டுகள்) மட்டுமே சாப்பிட வேண்டும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெற, பலாப்பழத்துடன் மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
  • மாலை அல்லது இரவு நேரத்தில் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • உடல் சூடாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2-2.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பலாப்பழம் உடன் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடல் சூட்டை குறைக்க முடியும்.

பலாப்பழத்தை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
  • கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்கள்.
  • நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள்.
  • உடல்நிலை சரியில்லாதவர்கள்.
  • கொதிப்பு அல்லது வேர்க்குரு உள்ளவர்கள்.
  • கர்ப்பம் தரிக்க முயற்சி செய்பவர்கள்.


இறுதியாக

கோடைக்கால பழங்களில் பலாப்பழம் சேர்ப்பது அற்புதமான மருத்துவ குணங்களை அளிக்கும். பலாப்பழம் எப்படி சாப்பிடலாம், எப்போது சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பார்த்தோம். சரியானமுறையில் உங்கள் உணவில் சேர ஊட்டச்சத்து நிபுணரை அணுகுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.