கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜத்ரா திருவிழாவில் இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் குவிந்தனர். ஆனால், பக்தர்களின் திரளான வருகையால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வெளியான வீடியோவில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்த நிலையில் அந்த மாநில முதல்வர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.