இப்படி கூட மரணம் வருமா ? நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் மரணம்!
Top Tamil News May 07, 2025 03:48 PM

உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும் மொராதாபாத் மாவட்டம் ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போது மணப்பெண் தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில், நடன மேடையில் இருந்து தனது அறையில் ஓய்வு எடுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அறைக்கு சென்ற தீக்ஷா வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது தீக்ஷா கட்டிலின் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தீக்ஷாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதேபோல், தீக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.