தற்போது வீட்டிலிருந்து குழந்தை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அவரது மகள் ஜாஸ்மின் 2023 மே மாதத்தில் பிறந்தார். இதனையடுத்து தாய் பணியில் இருந்த மனைவிக்கு பதிலாக, இவர் குழந்தையின் பராமரிப்பை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளார். அவர் தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, ஜாஸ்மினுக்காக சமைத்து, சுத்தம் செய்து, பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் வேலைகளை செய்து வருகிறார்.
இரவில் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தையை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தூக்கமின்மை, உடல் சோர்வு, மூட்டு வலி ஆகியவற்றால் அவதிப்படுவதாக உணர்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவியிடமிருந்து சரியான ஆதரவு இல்லாததால் மன அழுத்தம் அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
தன் குழந்தை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது கூட தான் 5 நாட்கள் தூக்கமின்றி பராமரித்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துள்ளது.இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. பொதுவாக பெண்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் ‘பிரசவத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு’, ஆண்களுக்கும் ஏற்படலாம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.