பீகார் மாநிலத்தில் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். கும்பலில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர விடாமல் செய்தனர்.
மேலும் ஒருவர் அந்த கும்பல் கடையில் இருந்த ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.13 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அடகு கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகிறார்கள். மேலும் பட்டப்பகலில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அடகு கடையில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.