வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பிரபல நடிகர் அஜாஸ் கான் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வரும் ஹவுஸ் அரஸ்ட் நிகழ்ச்சி உல்லு ஆப்பில் வெளியாகி வருகிறது. இதில், ஆபாச காட்சிகள் இருப்பதாக பல தரப்பினர் புகார் அளித்திருந்தனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பெண் ஒருவர் அஜாஸ் கான் மீது பாலியல் வழக்கு தொடர்ந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.