திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்த கள்ளக்காதலிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து தனிமையில் இருக்கும்போது கழுத்து அறுத்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பிமிலி அடுத்த டாகமர்ரி பஞ்சாயத்தின் புறநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபார்ச்சூன் ஹில்ஸ் வுட் லேஅவுட்டில் (வெள்ளிக்கிழமை) காலை, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பீமிலி போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இதில் அந்தப் பெண்ணைக் கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. இறந்த பெண்ணின் கழுத்தில் எரிந்த கருப்பு மணிகளின் செயின் இருந்ததால், அவர் ஒரு திருமணமான பெண் என்று அடையாளம் காணப்பட்டது. இதற்காக ஆறு தனிப்படை அமைத்த போலீசார் இறந்த பெண் மாலிகாவலசா பகுதியைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்பதும், ஏற்கனவே திருமணமாகி கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் 10 வகுப்பு படிக்கும் மகனும், 8 வகுப்பு படிக்கும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்த வெங்கடலட்சுமி என்பது தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரணையில் வெங்கட லட்சுமி திருமணத்திற்கு புறம்பான உறவை அதே பகுதியை சேர்ந்த கிராந்தி குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். ஏற்கனவே கிராந்தி குமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு அருகே வெங்கடலட்சுமி வசித்து வந்தார். அவ்வாறு கிராந்திகுமார் இரண்டாவது மனைவி வீட்டிற்கு செல்லும்போது வெங்கலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பாக மாறியது. இதனை அறிந்த கிராந்திகுமாரின் இரண்டாவது மனைவி அவ்வப்போது வெங்கடலட்சுமி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது மனைவியை வேறு பகுதிக்கு வீடு வாடகைக்கு எடுத்து குடிபெயர்ந்தார். இருப்பினும் கிராந்தி வெங்கடலட்சுமியுடன் தனது திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடர்ந்தார்.
இந்த விஷயத்தில் முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடப்பது வழக்கம். மறுபுறம், வெங்கடலட்சுமி, கிரந்திகுமாரை தன்னுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். இதனால் வெங்கடலட்சுமியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை வெங்கடலட்சுமியை வெளியே செல்லலாம் என பைக்கில் அழைத்து சென்றார். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். பின்னர் வீட்டில் இரவில் பைக்கில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக கூறி அவர் பைக்கில் பெட்ரோலை பிடித்து கொண்டு ஒரு பாட்டிலில் பெட்ரோல் பிடித்து கொண்டு அதனை வெங்கடலட்சுமியிடம் கொடுத்து பைக்கில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய டக்கமர்ரி பகுதியில் தனியாக சிறிது நேரம் இருந்துவிட்டு செல்லலாம் எனக்கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு, பின்னர் தன்னுடன் கொண்டு வந்த கத்தியால் வெங்கடலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடல் அடையாளம் தெரியாமல் இருக்க நகைகளை எடுத்து கொண்டு பின்னர் சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
வழக்கு விசாரணையின் போது, போலீசார் முதலில் வெங்கடலட்சுமியை அடையாளம் காணப்பட்ட அவரது மகனிடம் விசாரித்ததில் கிராந்திகுமாருடன் செல்வதாக தனது தாய் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதனால் போலீசார் கிராந்திகுமார் மீது சந்தேகத்தின்பெயரில் பிடித்து விசாரித்ததில் தானே கொலை செய்ததாக ஒப்பு கொண்டதால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.