கவுண்டமணி மனைவி சாந்தி (வயது.67) உடல்நலக்குறைவால் காலமானார். இது திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சாந்தியின் உடல் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து அங்கு அவரது திரையுலக நண்பர்களான செந்தில், சத்தியராஜ், உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், கவுண்டமணியின் மனைவி மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
கவுண்டமணி மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறி உள்ளார். வீடியோ இதோ.