சிங்கப்பெண்ணே: இதுவரை மூடி மூடி வைத்த ஆனந்தியின் விஷயம் சௌந்தர்யாவுக்குத் தெரிந்து விடுகிறது. அதிர்ச்சி அடையும் சௌந்தர்யா நம்ம கிட்டயே இப்படி மறைச்சிட்டாங்களேன்னு ஆஸ்டலில் ஆனந்தி, அவளது தோழிகளிடம் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறாள். அது மட்டும் பத்தாதுன்னு வாட்ச்மேனிடமும் எரிந்து விழுகிறாள். இது ஆனந்திக்கு சந்தேகத்தைக் கிளப்புகிறது.
ஆனந்தி நிற்கச் சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனிக்குத் தனியாகச் செல்கிறாள் சௌந்தர்யா. இதனால் மேலும் சந்தேகம் கொண்ட ஆனந்தியும் கம்பெனிக்குச் செல்கிறாள். அங்கு அன்புவிடம் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் சௌந்தர்யா. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஆனந்தி வந்து அதற்கு முட்டுக்கட்டை போடுகிறாள்.
ஒரு கட்டத்தில் ஆனந்தி சௌந்தர்யாவைத் தனியாக அழைத்து வந்து என்ன சொல்லப்போற அன்புவிடம்னு கேட்கிறாள். அப்போது தான் எல்லா உண்மைகளையும் சௌந்தர்யா சொல்ல அதிர்ந்து போகிறாள் ஆனந்தி. அதன்பிறகு ஆனந்தியிடம் இவ்ளோ பெரிய விஷயத்தை ஏன் எங்ககிட்ட மறைச்சே? நம்ம எல்லாரும் ஒரு குடும்பமாகத்தானே பழகுறோம்னு சௌந்தர்யா வருத்தப்படுகிறாள். இந்த விஷயத்தை எப்படியாவது அன்புவிடம் சொல்லிவிடு. அதுதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என சௌந்தர்யா சொல்கிறாள்.
அதற்கு ஆனந்தி நான் வீணா எந்தத் தப்பும் செய்யாத அன்புவின் மேல் பழியைப் போட விரும்பல. அவர் கோபுரத்தோட உச்சியில இருக்காரு. நான் குப்பைல இருக்கேன். அதனால அவரு மேல வீண் பழி சுமத்தக்கூடாது. இந்த விஷயம் அவருக்குத் தெரியவும் வேணாம். அதனால தான் நான் தற்கொலை கூட பண்ணப் போனேன். ஆனா அந்த சாவுக்குக் கூட என்னைப் பிடிக்கலன்னு கதறி அழுகிறாள் ஆனந்தி.
அதே நேரம் என்ன இருந்தாலும் அன்புவிடம் சொல்றது தான் நல்லது. உன்னை அவருதான் உயிருக்கு உயிரா நேசிக்கிறாருன்னு சௌந்தர்யா சொல்கிறாள். நீ சொல்லலன்னா நான் சொல்வேன் என்கிறாள். அதற்கு ஆனந்தி நானும் சொல்ல மாட்டேன். நீயும் இந்த விஷயத்தை அப்படியே மறந்துடு. மீறி சொன்னா நான் மேலே இருந்து குதிச்சி உயிரை விட்டுருவேன்னு மிரட்டுகிறாள் ஆனந்தி. மொட்டை மாடியில் வைத்து நடக்கும் இந்த உரையாடலை அங்கு வரும் அன்பு பார்த்து விடுகிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
The post first appeared on .