தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்த கவுண்டமணி இப்போதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் கவுண்டமணியை ஏராளமான ரசிகர்களுக்கு பிடிக்கும். குறிப்பாக செந்தில் கவுண்டமணி காமெடி என்றால் சொல்லவா வேணும். அந்த அளவுக்கு பிரபலம்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்திக்கு 67 வயது ஆகும் நிலையில் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்று மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பிய விஜய் நேரடியாக கவுண்டமணியின் வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் நடிகர் கவுண்டமணிக்கும் ஆறுதல் கூறினார்.