இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல், அவரது மனைவி அதியா ஷெட்டி தம்பதிக்கு மார்ச் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தங்கள் மகளுக்கு ‘எவாரா’ என பெயர் வைத்ததற்கான காரணத்தை சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் ராகுல் கூறியுள்ளார்.
“எவாரா என்ற பெயரை நான் தற்செயலாக கண்டுபிடித்தேன். நெருங்கிய நண்பர்கள் சிலர் பெயர் பரிந்துரை புத்தகங்களை அனுப்பினார்கள். அதில் முதன்முறையாக இந்த பெயரை பார்த்தேன். அதற்குப் பின்னர் கூகுளில் தேடி அதன் அர்த்தத்தை அறிந்தேன். அதன்பின் அந்தப் பெயரை மிகவும் விரும்பத் தொடங்கினேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இந்தப் பெயரை மனைவி அதியாவிடம் ஒப்புக்கொள்ள வைக்க சிறிது சவாலாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். “அவளுக்கு ஆரம்பத்தில் அந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆனால், எங்கள் இருவரின் பெற்றோரும் அதை விரும்பினார்கள். பின்னர் அதியாவுக்கும் அந்த பெயர் பிடித்துவிட்டது என ராகுல் கூறினார்.