இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தான் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் பங்கேற்பது கடினம் என ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறினார். இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஜாவேத் மியான்தத், பாசில் அலி ஆகியோர் தெரிவித்ததாவது, கவாஸ்கரின் கருத்து சரியானது அல்ல. கவாஸ்கர் போன்ற லெஜண்டுகள் அரசியலையும், விளையாட்டையும் ஒன்றிணைத்து பார்ப்பது வருந்தத்தக்கதாகும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை அவமதிப்பாக கூறியுள்ளார் எனவும், இது கிரிக்கெட் பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல் எனவும் கூறியுள்ளனர். மேலும் பல பாகிஸ்தான் வீரர்களும் கவாஸ்கரின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.