IPL 2025: அடிக்க விட்டு சேஸிங்கில் கோட்டை விட்ட அணிகள்!
Dhinasari Tamil May 05, 2025 04:48 PM

#featured_image %name%

ஐ.பி.எல் 2025 – இன்று இரண்டு ஆட்டங்கள் – 04.05.2025

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா vs ராஜஸ்தான்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (206/4, ரசல் 57, ரகுவன்ஷி 44, குர்பாஸ் 35, ரஹானே 30, ரிங்கு சிங் 19ஆர்ச்சர், யுத்வீர் சிங், தீக்ஷணா, ரியன் பராக் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/8, ரியன் பராக் 95, ஜெய்ஸ்வால் 34, ஹெட்மயர் 29, ஷுபம் துபே 25, மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் தலா இரண்டு விக்கட், வைபவ் அரோரா 1/50) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (25 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அஜிங்க்யா ரஹானே உடன் (24 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து வேகமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அதன் பின்னர் அங்கிரிஷ் ரகுவன்ஷி (31 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர்), ஆண்ட்ரூ ரசல் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), ரிங்கு சிங் (6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மூவரும் அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க உதவினர்.

வெற்றிக்கு 20 ஓவர்களில் 207 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இளம் வயது வைபவ் சூர்யவம்ஷி (4 ரன்) முதல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு அடுத்து குனால் சிங் ராதோர் (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்கவீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ரியான் பாராக் (45 பந்துகளில் 95 ரன், 6 ஃபோர், 8 சிக்சர்) உடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் 59 ரன்கள் எடுக்க வைத்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், துருவ் ஜுரல் மற்றும் வனிந்து ஹசரங்கா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர் (23 பந்துகளில் 29 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷுபம் துபே (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25, 1 ஃபோர், 2 சிக்சர்), ஆர்ச்சர் (8 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர்) மூவரும் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 என்ற நிலைக்குக் கொண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கொல்கொத்தா அணியின் ஆண்ட்ரூ ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் vs லக்னோ

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (236/5, பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங்க் சிங் 33, ஜோஷ் இங்கிலிஷ் 30, ஆகாஷ் சிங் 2/30, திக்வேஷ் ரத்தி 2/46, பிரின்ஸ் யாதவ் 1/43) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (199/7, ஆயுஷ் பதோனி 74, அப்துல் சமத் 45, ஆவேஷ் கான் 19, ரிஷப் பந்த் 18, எய்டன் மர்க்ரம் 13, அர்ஷ்தீப் சிங் 3/16, ஒமர்சாய் 2/33, மார்கோ ஜென்சன் 1/31, சாஹல் 1/50) 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அத்னால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (48 பந்துகளில் 91 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) 18.5ஆவது வரை விளையாடினார்.

அவர், ஜோஷ் இங்கிலீஷ் (14 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 45 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), நெஹல் வதேரா 99 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் அணிக்கு நல்ல ஸ்கோர் அடைய உதவினார்.

இறுதியில் ஷஷாங்க் சிங் (15 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது.

237 என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆயுஷ் பதோனி (40 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) மட்டுமே சிறப்பாக ஆடினார். பின்னால் அப்துல் சமத் (24 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக ஆடினார்.

பிற வீரர்களான எய்டன் மர்க்ரம் (13 ரன்), மிட்சல் மார்ஷ் (பூஜ்யம் ரன்), நிக்கோலஸ் பூரன் (6 ரன்), ரிஷப் பந்த் (18 ரன்), டேவிட் மில்லர் (11 ரன்), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 19 ரன்), பிரின்ஸ் யாதவ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் நிலைத்து ஆடவும் முற்படவில்லை; வேகமாக ரன் சேர்க்கவும் முயலவில்லை.

இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 199 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 37 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர், பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.