தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் களம் காணும் நிலையில் அதற்கான பணிகளை தற்போதே மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் கோவையில் ரோடு ஷோ நடத்திய நிலையில் கொடைக்கானலுக்கு படப்பிடிப்புக்காக சென்ற போதிலும் ரோடு ஷோ நடத்தினார். நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்துள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது விஜயை கடந்த சில வருடங்களாகவே பிரதமர் மோடி அரசை விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ் தற்போது நடிகர் விஜயை விமர்சித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. இது பற்றி அவர் கூறியதாவது, நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை. அவருக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து போதிய புரிதலும் இல்லை. சிலர் விஜயை நடிகர் பவன் கல்யாணுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
பிரபலமான நடிகராக இருந்தால் அவர்களின் கையில் கொடுத்து விட முடியுமா. நடிகர்கள் அரசியல்வாதியாக மாறும்போது மாற்று சக்தி என்று சீட் கிடைப்பதாக கூறினார். இதேபோன்று பாலிவுட் நடிகர்கள் பலரும் விலை போய் விட்டதாகவும் தற்போது எந்த ஒரு பிரச்சினைகளுக்கு எதிராகவும் அவர்கள் குரல் கொடுப்பதில்லை என்றும் கூறினார். மேலும் நடிகர் விஜயுடன் சேர்ந்து பிரகாஷ்ராஜ் கில்லி, வாரிசு உட்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.