புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடியில் நேற்று இரவு கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் ஏற்பட்ட தாக்குதலில் மொத்தம் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வீடுகளுக்கும் அவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த மோதலில் ஒரு அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அனைவரும் வீட்டிற்கு திரும்பிய போது திடீரென சில இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த மோதலை தொடர்ந்து எஸ்.பி அபிஷேக் குப்தா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.