வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் கல்லூரி வளாகத்தில் உள்ள டிரைவர் ஓய்வறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கிரெசென்ட் கல்லூரியில், ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்துவந்த மணிகண்டன் (வ/27,) கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர். இவர் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து இரத்த வெள்ளத்தில் இருந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.